சிங்கப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு

Singapore landslide
(Photo Credit: Mothership)

சிங்கப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், பாசீர் ரிஸில் நிலச்சரிவு ஏற்படுவதைக் காட்டியது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட புதிதாக 35 பேருக்கு தொற்று

அதே போல நேற்று முன்தினம், லயாங் அவென்யூ நோக்கிச் செல்லும் தெம்பனீஸ் அதிவேக நெடுஞ்சாலையின், ஸ்லிப் சாலையின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு வடிகால் உலோக வேலிகள் சேதமடைந்தன.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், ஸ்லிப் சாலையின் நிலைத்தன்மை பாதிக்கப்படவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஜனவரி 3) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதனை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை இரவு முதல் ஸ்லிப் சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும், கடும் மழையால் சனிக்கிழமையன்று ஜரான் மினியாக் (Furama Riverfront) மற்றும் யார்க் ஹில் (York Hill) அருகே அமைந்துள்ள அவுட்ராம் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஃபுராமா ரிவர் ஃபிரண்ட் (Furama Riverfront) ஹோட்டலுடன் இணைக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Kusu தீவு, லாசரஸ் (Lazarus) தீவு மற்றும் செயின்ட் ஜான்ஸ் (St John’s) தீவு ஆகிய இடங்களிலும் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா: பால்குடம் எடுக்க இணைய முன்பதிவு தொடக்கம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…