சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட புதிதாக 35 பேருக்கு தொற்று

Singapore covid-19
(PHOTO: Lawrence Wong)

சிங்கப்பூரில் இன்றைய (ஜன.3) நிலவரப்படி, புதிதாக 35 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா: பால்குடம் எடுக்க இணைய முன்பதிவு தொடக்கம்.!

அவர்கள் அனைவரும் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த 35 நபர்களில், ஆறு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் மற்றும் 7 வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குவர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாரும் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,697ஆக உள்ளது.

சிங்கப்பூரில் தொடர் கனமழை… 20 இடங்களில் மரங்கள், கிளைகள் முறிவு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…