சிங்கப்பூரில் தொடர் கனமழை… 20 இடங்களில் மரங்கள், கிளைகள் முறிவு

Singapore rain tree falls
(Photo: So Solomon)

சிங்கப்பூரில் தொடர் கனமழை பெய்து வரும் சூழலில், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை உதவியது குறிப்பிடத்தக்கது.

KJE அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து.. சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் மரணம்

இந்நிலையில், 3 நாட்களாக மழை பெய்து வருவதால், சுமார் 20 இடங்களில் மரங்கள் / கிளைகள் முறிந்து விழுந்துள்ளதாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சிங்கப்பூரில் மரங்கள் தொடர்ந்து சோதிக்கப்படும், அதாவது 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு இடைவெளியில் சோதிக்கப்படும்.

இதில் புயல் காரணமாக சேதமடைந்த மரங்களும் அடையாளம் காணப்படும், மேலும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள அந்த சோதனை உதவும் என்று அது குறிப்பிட்டள்ளது.

கூடுதலாக இந்த சோதனையானது மழைக்காலங்களில் அதிகரிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சாலையை கடந்த ஆடவர் மீது லாரி மோதி விபத்து – காணொளி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…