சிங்கப்பூரில் சாலையை கடந்த ஆடவர் மீது லாரி மோதி விபத்து – காணொளி

Singapore Jaywalker rammed lorry
(PHOTO: Singapore Road Accident/Facebook)

ஜனவரி 1 புத்தாண்டில், Singapore Road Accident பேஸ்புக் பக்கம், சிங்கப்பூரில் நடந்த விபத்து குறித்த காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளது.

இந்த சம்பவம் காரின் முன்பக்க கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது. காணொளியில், ஆடவர் ஒருவர் சாலையின் குறுக்கே கடக்க முயலும்போது, பின்னால் வந்த லாரி ஒன்று அவரை மோதுவதை காணமுடிகிறது.

புதியவகை கொரோனா: எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் சிங்கப்பூர்!

அவர் எதிர் திசையில் வரும் லாரியை பார்க்கவில்லை என்பதும், அவர் சாலையைக் கடக்கத் தொடங்கிய பின்னரே லாரியைக் கண்டார் என்பதும் காணொளியில் தெளிவாக தெரிகிறது.

லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சாலையில் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்த பேஸ்புக் பதிவில் பெரும்பாலான பின்னுட்டங்கள், அந்த நபர் சாலையைக் கடப்பதற்கு முன்பு சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டின.

சாலையை கடக்கும்போது கவனமாகவும், சாலை விதிகளை முறையாகவும் பின்பற்றினால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையேயான அதிவேக ரயில் (HSR) திட்டம் ரத்து

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…