ரமல்லாவில் சிங்கப்பூரின் பிரதிநிதி அலுவலகம் செயல்படத் தொடங்கியது!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரத்தில் உள்ள சிங்கப்பூரின் பிரதிநிதி அலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த அலுவலகத்தின் கௌரவ இயக்குநர் ஷரீன் ஷெல்லே (Honorary Director Ms Shireen Shelleh) தலைமை பொறுப்பை வகிப்பார்.

சிங்கப்பூருக்குத் தேவையான உணவு மொத்தமும் இங்கிருந்துதான் இறக்குமதியாம்! – மீன்களின் விலையேற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் கேள்வி!

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் பாலஸ்தீனிய அதிகார சபைக்கான சிங்கப்பூரின் பிரதிநிதியான ஹவாஸி டெய்பியின் பணியை அலுவலகம் ஆதரிக்கும். பாலஸ்தீனத்தில் உள்ள சிங்கப்பூரர்கள் உதவி தேவையெனில், இந்த அலுவலகத்தை அணுகலாம்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

ரமல்லாவில் உள்ள சிங்கப்பூர் பிரதிநிதி அலுவலகத்தின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:

4வது தளம், பெய்லாசன் கட்டிடம் (4th Floor, Baylasan Building),
மேசன், ரமல்லா (Maysoun, Ramallah),
பாலஸ்தீனம்,
தொலைபேசி எண்: +970-568888766,
ஃபாக்ஸ்: +970-2-2955656.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.