நாடாளுமன்றத்துக்கு வெளியே விபத்து: உதவிக்கு ஓடிய பொதுமக்கள் – 5 பேர் மருத்துவமனையில்

outside Parliament House accident
Social media

நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் நேற்று (நவம்பர் 14) நடந்த விபத்தில் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நார்த் பிரிட்ஜ் ரோடு மற்றும் பார்லிமென்ட் பிளேஸ் சந்திப்பில் காலை 8.15 மணியளவில் நீல நிற ஹோண்டா மற்றும் கருப்பு BMW கார் ஆகியவை விபத்துக்குள்ளானது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பரவின, அதில் சுமார் 12 பேர் நீல நிற ஹோண்டாவை தூக்குவதை காணமுடிகிறது.

மேலும் காயம் ஏற்பட்டு சாலையில் விழுந்து கிடப்பவர்களையும் சிலர் கவனிக்கின்றனர்.

அதனை அடுத்து, ஐந்து பேரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அதில் 51 மற்றும் 59 வயதுடைய இரண்டு ஓட்டுனர்களும், 28 மற்றும் 61 வயதுக்குட்பட்ட மூன்று பயணிகளும் அடங்குவர் என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்