சிங்கப்பூரின் புதிய பயணத்தட திட்டத்தால், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Pic: AFP

கோவிட்-19 தொற்றுக் காரணமாக, பல நாட்கள் சிங்கப்பூரிலிருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கும் பயணம் செய்ய முடியாதவாறு பல்வேறு தடைகளும், கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், சிங்கப்பூர் பயணம் சம்பந்தப்பட்ட கட்டுபாடுகளில் பல தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு!

இவ்வாறு தளர்த்தப்பட்ட புதிய பயணத்தட திட்டத்தால், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்ற நாட்டினர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிங்கப்பூரில் நடக்கும் மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனங்கள் மிகுந்த பயனடைந்துள்ளது.

மேலும் பெரிய அளவிலான மாநாடுகள் நடத்தயிருப்பது பற்றியும் இந்நிறுவனங்கள் கலந்துரையாடி வருவதாக, அனைத்துலக மாநாட்டு சேவைகளின் தலைவர் திரு. மெத்தயஸ் போஷ்க் தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சார்ந்த மாநாடு நடத்தும் நிறுவனங்கள், மற்ற ஆசிய நாடுகளில் நடக்க இருக்கக்கூடிய மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சிங்கப்பூரில் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இப்படி சிங்கப்பூர் ஏற்பாடு செய்த புதிய பயணத்தட திட்டத்தால், பல வெளிநாட்டினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பல மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், சிங்கப்பூர் கோவிட்-19 நெருக்கடிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருவதை உணர முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்