வெளிநாடுகளில் சிறுநீரக பாதிப்பு / மரணத்தை ஏற்படுத்தும் சிரப் மருந்துகள் – சிங்கப்பூர் HSA எச்சரிக்கை

indian worker-dies-hit-by-reversing-vehicle-jurong-west-worksite

வெளிநாடுகளில் சில குறிப்பிட்ட சிரப் மற்றும் திரவ அடிப்படையிலான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு அல்லது இறப்புகள் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) எச்சரிக்கை செய்துள்ளது.

நச்சு இரசாயனங்களான எத்திலீன் கிளைகோல் (ethylene glycol) அல்லது டைதிலீன் கிளைகோல் (diethylene glycol) மருந்துகளால் இந்த சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

செங்காங் ஈஸ்ட் ரோட்டில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து – ஒருவர் மரணம்

இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவைக்காக விற்கப்படும் இந்த பாதிக்கப்பட்ட மருந்துகள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் இதுவரை உள்நாட்டில் கண்டறியப்படவில்லை என்றும் HSA கூறியது.

இவ்வகை நச்சு மருந்துகள் சிங்கப்பூரில் இல்லை என்றாலும், சில பொதுமக்கள் வெளிநாட்டிலோ அல்லது அறிமுகமில்லாத இடங்களில் இருந்து அவற்றைப் பெற்றிருக்கலாம் என்றும் HSA எச்சரித்தது.

காம்பியாவில் சமீபத்தில் 60 குழைந்தைகள் உயிரிழந்தன, அதுக்கும் அந்த மருந்துகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சம்பளம் சரியாக பெறாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓடி உதவிய மனிதவள அமைச்சகம்: வாய்மூடி சம்பளத்தை கொடுத்த நிறுவனம்