பாடாங்கில் கோலாகலமாக நடந்த தேசிய தின அணி வகுப்பு!

பாடாங்கில் கோலாகலமாக நடந்த தேசிய தின அணி வகுப்பு!
Photo: Singapore Prime Minister

 

 

58வது தேசியத் தினத்தையொட்டி, ஆகஸ்ட் 09- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் பாடாங்கில் அணி வகுப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தனர். அணி வகுப்பில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்து கொண்டார். அவர் வருகையின் போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின்னர், அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அதிபர், வீரர்களுடன் கலந்துரையாடினார்.

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அணி வகுப்பில் கலந்து கொண்டு, விழா மேடைக்கு வந்தார். அப்போது, பாடாங்கில் குழுமியிருந்த பார்வையாளர்கள் சுமார் 27,000 பேர் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

சிங்கப்பூர் விமானப் படைகள், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வாகனங்கள் அணிவகுத்தன. அணிவகுப்பில் 8 சிவப்பு சிங்க வான்குடை சாகச வீரர்கள் சுமார் 3 கி.மீ. உயரத்தில் இருந்து பாதுகாப்பாக தரையிறங்கினார்கள். அதைக் கண்ட பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டின் வலிமையைப் பறைச்சாற்றும் வகையில், சிங்கப்பூரின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சேர்ந்த மிடுக்கான அணி வகுப்பில் கலந்து பீடு நடைப்போட்டன. நாட்டிற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் எஃப்-16டிபிளஸ் போர் விமானங்கள் சாகச காட்சியை அரங்கேற்றினர்.

“சிங்கப்பூரில் அமோக வேலை” – ஏமாந்து நிர்கதியாய் நின்ற தமிழ்நாட்டு ஊழியர்

அதைத் தொடர்ந்து, இரவில் கண்கவர் வாணவேடிக்கை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு பாடாங்கில் முழுமையாக இந்தாண்டு தான் தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடந்தன.

விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.