சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்

Mysterious black smoke ring seen over Sentosa likely
Danenrdnslm5 on TikTok

சிங்கப்பூர் செந்தோசா தீவில் திடீரென தோன்றிய மர்ம கரும்புகை வளையத்தால் பொதுமக்களுக்கு அச்சம் கலந்த குழப்பம் ஏற்பட்டது.

இந்த வினோதமான காட்சி நேற்று ஆகஸ்ட் 7 அன்று “danenrdnslm5” என்ற TikTok பயனரால் பகிரப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

வீடியோவைப் பகிர்ந்த நூருதீன் செலாமட், அவரும் அவரது நண்பர்களும் சென்டோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரையில் சுற்றுலா சென்றபோது கரும்புகை வளையத்தைக் கண்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

முதலில் அது தேனீக் கூட்டமாக இருக்கலாம் என்று எண்ணிய நூருதீன் ஓட்டம் பிடிக்க எண்ணினார், ஆனால் அது தேனீக் கூட்டம் இல்லை என்பதை உறுதி செய்தார்.

அங்கிருந்த மற்றவர்கள் வளையம் விலகிச் செல்லும்போது அதைப் பின்தொடர்ந்தது சென்று புகைப்படம் எடுத்தனர்.

கரும்புகை மெல்ல மெல்ல களைந்து சில நிமிடங்களில் வளையம் மறைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அது என்ன என்பதை கேட்டறிய வானிலை ஆய்வகத்தை ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்