இந்தியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

sia-increase-flights-2024
(Photo: Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) விமானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதனை பூர்த்தி செய்யும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களுக்கு விமான சேவையை அது அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு 2024 மார்ச் முதல் அக்டோபர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களுக்கான விமான சேவையை அது அதிகரிக்கும்.

பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்

2024 ஜூன் 2 முதல், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினின் பார்சிலோனா இடையே வாரத்திற்கு இருமுறை இயங்கும் நேரடி விமானங்கள் மீண்டும் இயக்கப்படும்.

அதே போல, 2024 செப்டம்பர் 1 முதல், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திற்கு தினமும் நான்கு விமானங்கள் வரை இயக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும், 2024 மார்ச் 31 முதல், சிங்கப்பூர் மற்றும் துபாய் இடையே வாரம் 11 விமான சேவைகள் வழங்கப்படும் என அது கூறியுள்ளது.

இந்தியாவில் அகமதாபாத், ஆஸ்திரேலியாவின் டார்வின் மற்றும் பெர்த், டென்மார்க்கின் கோபன்ஹேகன் மற்றும் அமெரிக்காவின் சியாட்டில் மற்றும் ஹூஸ்டன் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானச் சேவைகள் கோவிட்-19க்கு முந்தைய நிலைக்கு கொண்டுவரப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

சில முக்கிய பகுதிகளுக்கு சூப்பர்ஜம்போ விமானங்களையும் இயக்க உள்ளதாக SIA தெரிவித்துள்ளது.

இந்தியரை இன ரீதியாக கொச்சைப்படுத்தி, எட்டி உதைத்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை