சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா குட்டியின் பாலினம் கண்டுபிடிப்பு – பொதுமக்கள் பெயரை பரிந்துரைக்கலாம்.!

panda cub revealed boy
Pic: Wildlife Reserves Singapore

சிங்கப்பூர் ரிவர் சஃபாரி (River Safari) விலங்கியல் பூங்காவில் உள்ள Jia Jia மற்றும் Kai Kai பாண்டாக்களுக்கு குட்டி ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி அன்று பிறந்தது.

ரிவர் சஃபாரியில் இனப்பெருக்க முயற்சிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய பின்னர், ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு வெற்றியை கண்டது

இந்நிலையில், Jia Jia மற்றும் Kai Kai பாண்டாக்களுக்கு பிறந்த குட்டியின் பாலினம் குறித்து அறிய சீனாவில் உள்ள ஆய்வகத்திற்கு பாண்டா குட்டியின் காணொளிகளும், படங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

அவற்றை ஆராய்ந்த அதிகாரிகள் குட்டியின் பாலினத்தை உறுதிப்படுத்தினர். Jia Jia மற்றும் Kai Kai பாண்டாக்களுக்கு பிறந்தது ஆண் குட்டி என கண்டறியப்பட்டுள்ளது.

பாண்டா குட்டிக்கு வரும் நவம்பர் மாதம் 21ம் தேதிக்குள் பெயர் வைக்கவேண்டும் என்றும், பொதுமக்கள் பாண்டா குட்டிக்கான பெயர்களைப் பரிந்துரைக்கலாம் என்றும் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.

பாண்டா குட்டி தற்பொழுது நன்றாக வளர்ந்து வருகிறது என்றும், குட்டிக்கு என பெயர் வைக்கலாம் என்பது குறித்து சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் முன்மொழியலாம் என்றும் வனவிலங்குக் காப்பகம் கூறியுள்ளது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – MOM சோதனை நடவடிக்கை

பாண்டா குட்டிக்கு வைக்கும் பெயர், எளிமையாகவும், சிறிதாகவும், ஆக்ககரமாகவும் இருக்க வேண்டும் என்றும், அது சிங்கப்பூர், சீன நட்புறவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 19ம் தேதிக்குள் பெயர்களை சமர்பிக்க வேண்டும், தேர்வு செய்யப்படும் பெயர்கள் பின்னர் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், அதிக வாக்குகளைப் பெறும் பெயர், பாண்டா குட்டிக்கு சூட்டப்படும் என்றும் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.