பங்குனி உத்திரத் திருவிழா- புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Official Facebook Page

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் மற்றும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ!

நடப்பாண்டு மார்ச் மாதம் 18- ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple) நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும், பங்குனி உத்திரத் திருவிழா குறித்து கோயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு காவடி ஊர்வலம் இடம்பெறாது. பால்குடம் ஊர்வலத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தால் பால் குடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை வாங்கி கொண்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தலாம். பால் குடம் மற்றும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் http://booking.htsbt.org.sg/ என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

முழுமையாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பங்குனி உத்திர நாளில் பால் குடங்கள் விற்பனைக்கு இல்லை. இன்று (17/03/2022) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (18/03/2022) நண்பகல் 12.00 மணி வரை பால் குடம் செலுத்தலாம். நாளை (18/02/2022) காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலில் கிருமி நீக்கம் செய்வதற்காக கோயில் நாளை (18/03/2022) மதியம் 12.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மூடப்பட்டிருக்கும். அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் பாக்கெட் பாலை வாங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிகாலையில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்”- சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கோயிலுக்கு வந்துப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தரிசனம் செய்யும் வகையில், கோயில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. யீஷுன் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் (Yishun Industrial Park) இக்கோயில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.