“அதிகாலையில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்”- சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Mothership

சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (Meteorological Service Singapore- ‘MSS’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் மாதம் இரண்டாம் பாதியின் சில நாட்களில் சிங்கப்பூரில் அதிகாலையில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் பிற்பகலில் குறுகிய கால மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை மாலை வரை நீடிக்கலாம்.

கோவிட்-19 தடுப்பூசிக்கு தகுதியான நபர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு!

ஒட்டுமொத்தமாக மார்ச் மாதத்திற்கான மழை சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி அதிகபட்ச வெப்பநிலை இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸை எட்டும். பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ!

தற்போதுள்ள வடகிழக்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக வலுவிழந்து, இடைப்பட்ட பருவமழை (Inter-Monsoon Period) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் லேசான மாறி காற்று, வெப்பமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை போன்றவற்றைக் காணலாம். அவை அதிக மின்னலுடன் சில நேரங்களில் கனமழையாக இருக்கும்.” இவ்வாறு சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.