கோவிட்-19 தடுப்பூசிக்கு தகுதியான நபர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு!

Photo: Getty

கோவிட்-19 தடுப்பூசிக்கு தகுதியுடையோர் அனைவரும் தடுப்பூசி நிலையத்திற்கு சென்று முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

இந்த புதிய நடைமுறை இன்று வியாழன் (மார்ச் 17) முதல் நடப்புக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்ணை நாசம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள்: இன்று (மார்ச் 17) நீதிமன்றம் அளித்த உத்தரவு…!

வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு முன், முதன்மை தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசிகளை முன்பதிவில்லாமல் போட்டுக்கொள்ளலாம்.

மேலும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் எந்தவொரு குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலையத்திற்கும் செல்லலாம்.

அதே போல், 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் Pfizer-BioNTech/Comirnaty வகை தடுப்பூசி வழங்கும் எந்த நிலையத்திற்கு செல்லலாம்.

மேலும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் mRNA தடுப்பூசிகளை வழங்கும் எந்த நிலையத்திற்கு செல்லலாம்.

இந்த தகவலை சுகாதார அமைச்சகம் (MOH), கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் குழந்தைகள் நல அமைப்பு (ECDA) ஆகியவை புதன்கிழமை இரவு செய்திக்குறிப்பில் தெரிவித்தன.

துணி காயவைக்கும் ரேக் பின்னால் நின்று தவறான செயல் செய்த ஆடவர்… நெட்டில் பரவிய வீடியோ – தூக்கிய போலீஸ்!