பாசிர் ரிஸ் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 வயதான முதியவர் உயிரிழப்பு!

Photo: Shin Min Daily News

மார்ச் 1- ஆம் தேதி அன்று காலை 08.45 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள பாசிர் ரிஸ் டிரைவில் 6- ல் உள்ள பிளாக் 472- ல் உள்ள (Block 472 Pasir Ris Drive 6) அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து சீனா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்களின் ஒரு குழுவினர் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு தீயணைப்புக் குழுவினர், 12வது மாடிக்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த முதிய தம்பதியைப் பத்திரமாக மீட்டனர். இருவரும் புகையை சுவாசித்ததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, 98 வயதான முதியவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 90 வயதான மூதாட்டி சிங்கப்பூர் சாங்கி பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், 98 வயதான முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.