இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை

pasir-ris-free-haircut
Facebook and Google Maps

பாசிர் ரிஸில் அமைந்துள்ள இந்தியன் பார்பர் முடிதிருத்தும் கடை ஒன்று கட்டணமில்லா இலவச சலுகையை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

இந்த சிறப்பான சலுகை பற்றிய தகவல், பேஸ்புக் மற்றும் Reddit வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு வருகிறது உதவித் தொகை

இந்தியன் பார்பர் ஷாப் (Indian Barber Shop) என்று அழைக்கப்படும் அந்த கடை, பிளாக் 440 பாசிர் ரிஸ் டிரைவ் 4 இல் அமைந்துள்ளது.

அதாவது, காஃபிஷாப் மற்றும் ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு இடையே அது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடையின் கண்ணாடிக் கதவில் இலவச முடிதிருத்தும் சேவை பற்றிய விளம்பர போஸ்டர் இடம் பெற்றிருந்தது.

அதோடு சேர்த்து, அதன் புதுப்பிக்கப்பட்ட சேவை விலைப்பட்டியலும் இடம் பெற்றிருந்தது.

மூத்த குடிமக்களுக்கு சாதாரண முடித்திருத்தம் செய்வதற்கு S$5 முதல் மொட்டை மற்றும் சுத்தமான ஷேவ் செய்வதற்கு S$18 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலவசம்

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கு முடித்திருத்தம் இலவசம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடற் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் இலவச முடித்திருத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடை இயங்கும் நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 9:30 மணி வரை

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதில் நிலவும் சிக்கல் – சோதனை மேல் சோதனை