வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதில் நிலவும் சிக்கல் – சோதனை மேல் சோதனை

work permit salary increase
Pic: MOM

வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு வேலை விசா கிடைத்தும் அவர்களால் சிங்கப்பூர் வர முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

விசா வர நீண்ட காலம் காத்திருந்தது போக தற்போது விசா வந்தும் வேலைக்கு சேர நீண்ட காலம் எடுப்பதாக பல வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றன.

சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்

மனிதவள அமைச்சகம் அனுமதி வழங்கியும் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

வேலை விசா உங்களுக்கு வந்தாலும் நீங்கள் இங்கு வந்து தங்கும் இடத்துக்கான பதிவு முக்கியம் என்பதை நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

ஏனெனில், சிங்கப்பூரில் தங்கும் இடங்கள் கிட்டத்தட்ட நிரம்பியதாக செய்திகள் வருகின்றன. ஆகையால், ஊழியர்களுக்கு முதலாளிகளே தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தங்கும் இடம் பற்றாக்குறை, அதிகரிக்கும் வாடகை போன்றவை வேலைக்கு இங்கு கொண்டு வர தடையாக உள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து அதனை MOM இடம் பதிவு செய்த பின்னர் தான் இங்கு வரவைக்க முடியும்.

ஆகவே மனிதவள அமைச்சகத்தின் அனுமதி மற்றும் IP கிடைத்தும் சிலருக்கு கால தாமதம் ஏற்படுகிறது.

கூடுதல் விவரம்:

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்

சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்