சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்

chennai tourist death accident singapore bus to kl
Photo: Social media

சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு 28 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி கடும் விபத்து ஏற்பட்டது.

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மெலக்கா வட்டாரத்திற்கு அருகே நேற்று (ஜன.13) அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

“மகிழ்ச்சி குறைவு” என சொல்லும் சிங்கப்பூரர்கள்.. அதிக சம்பளம் வாங்குவோர் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர் – ஆய்வு

இதில் சென்னையைச் சேர்ந்த 17 வயது பெண் சுற்றுலாப் பயணி கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பின்னர் அவர் உயிரிழந்தார்.

கொழுந்து விட்டு எரிந்த பேருந்தில் அந்த பெண் சிக்கிக் கொண்டதாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் காயமடைந்தனர்.

அவர்களின் வயது 19 முதல் 69 வயது வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

எஞ்சிய 23 பயணிகள்

பேருந்தில் பயணித்த எஞ்சிய 23 பயணிகள், 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த இரண்டு ஓட்டுனர்களுக்கு காயமடையவில்லை என்று உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலை 3:50 மணியளவில் நடந்ததாக போலீஸ் தலைவர் மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

விசாரணைகள்

உயிரிழந்த பெண்ணின் சடலம் கூடுதல் பரிசோதனைக்காக மெலக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிற்து.

வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்