“மகிழ்ச்சி குறைவு” என சொல்லும் சிங்கப்பூரர்கள்.. அதிக சம்பளம் வாங்குவோர் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர் – ஆய்வு

singaporeans-happiness survey
Photo: gov.sg

சிங்கப்பூரர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இருப்பினும், வாழ்க்கை குறித்து மிகவும் சமநிலையான பார்வை கொண்ட மக்கள் பொதுவாக மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்

2022 ஆம் ஆண்டின் வாழ்க்கைத் தரம் தொடர்பான கணக்கெடுப்புகளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) வெளியிட்டது.

2016 முதல் 2022 வரை, சிங்கப்பூரர்கள் வாழ்க்கையை குறைவாக அனுபவித்ததாக கூறினர். மேலும் சாதனை, கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை குறிக்கோள் ஆகியவை குறித்த உணர்வுகள் குறைந்துள்ளன.

அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிகமாக மகிழ்ச்சியை அனுபவிப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதாவது அதிக சம்பளத்துக்கு மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பைக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

குறைவான சம்பளம் பெறுவோரின் திருப்தி பெரும்பாலும் குறைவாக காணப்பட்டது.

2022 ஜூன் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், 21 முதல் 79 வயது வரையுள்ள சுமார் 1,905 சிங்கப்பூரர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

சிங்கப்பூரர்களின் நல்வாழ்வில் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று NUS ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க

சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க