டாக்ஸியில் இசைத்த பாடல்.. பிடித்து போய் $100 டிப்ஸ் வழங்கிய வெளிநாட்டு பயணி – அப்டி என்ன பாடல்?

Passengers give cabby $90 tip playing wonderful songs
PHOTO: Facebook/Ann Wong

டாக்ஸியில் சும்மா போட்ட ஒரு பாடலுக்கு $100 சிங்கப்பூர் டாலர்களை பரிசாக பெற்ற அதிர்ஷ்டசாலி ஓட்டுநர் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பயண கட்டணத்தை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான தொகையை ஓட்டுநர் பயணிகளிடம் இருந்து அன்பளிப்பாக பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து

ஆன் வோங் என்ற அவர் தாம் பெற்ற இன்ப அதிர்ச்சியை Taxiuncle என்ற பேஸ்புக் குழுவில் கடந்த புதன்கிழமை (ஜூலை 12) அன்று பகிர்ந்தார்.

மீட்டர் கட்டணம் மற்றும் S$100 நோட்டையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றி இருந்தார் வோங்.

இந்தோனேசியாவை சேர்ந்த சீன ஜோடி அவர் வண்டியில் சென்றதாகவும், சில பழைய சீனப் பாடல்களை அவர் போட்டதாகவும் கூறினார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து கோரஸாக அந்த பாடல்களை பாடி மகிழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் இறங்கவேண்டிய இடம் வந்ததும் அவர்களுக்கான பயண கட்டணம் $9.60 ஆக பதிவானது. ஆனால், பெண்மணி $100 நோட்டைக் எடுத்து ஓட்டுனரிடம் கொடுத்ததாகவும் ஓட்டுநர் அந்த பதிவில் கூறினார்.

என்னிடம் போதிய சில்லறை இல்லை, அதற்கு பதிலாக $10 நோட்டை தாருங்கள் என வோங் கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பெண், இந்த S$100 நோட்டு உங்களுக்கு தான் என்று வோங்கிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர் பேசாமல் நின்றார்.

“அற்புதமான பாடல்களை ஒலிக்க செய்ததற்கு நன்றி. அந்த பாடல்கள் எங்களின் இளமை காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது” என்று கூறி பெண்மணி விடைபெற்றார்.

“அன்பு தான் எல்லாம்” என்பதை உணர்த்திய பெண்மணியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பலத்த சத்தத்துடன் கீழே விழுந்த ஆடவர் – சம்பவ இடத்திலேயே மரணம்