சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து

ஹென்டர்சன் சாலை
Tamil Micset Singapore File Photo

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாங்கி ஈஸ்ட் கட்டுமான திட்ட தளத்தில் கடந்த வியாழன் (ஜூலை 13) அன்று நடந்த விபத்தில் 30 வயதான அவர் மரணித்தார்.

“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்

அங்கு டெர்மினல் 5 மற்றும் சாங்கி விமான நிலைய கூடுதல் ஓடுபாதைக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.

ஸ்கிட்-ஸ்டீர் என்ற கனரக வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்த இந்திய கட்டுமான ஊழியரை, வாகனத்தின் செயலிழந்த பாகம் இடிந்து விழுந்து தாக்கியதில், ​​​​அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது, மேலும் வேலையிடத்தில் அனைத்து இயந்திர செயல்பாடுகளையும் நிறுத்துமாறும் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அது கூறியது.

சாங்கி ஈஸ்ட் கட்டுமான திட்ட தளத்தில் நடக்கும் முதல் வேலையிட மரணம் இது அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2021 நவம்பர் மாதம் 43 வயதான இந்திய நாட்டவர் இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் இந்த வாரத்தில் நடந்த இரண்டாவது வேலையிட மரணம் இதுவாகும், ஜூரோங் வெஸ்டில் உள்ள வேலையிடத்தில் பின்னால் வந்த வாகனம் மோதியதில் 33 வயதான இந்திய ஊழியர் உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை நடந்த சம்பவம் இது

இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் தங்கம் போல் எகிறும் தக்காளி விலை… சிங்கப்பூரில் பாதிப்பு இருக்குமா? – லிட்டில் இந்தியாவில் நிலை என்ன?