சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!

Singapore passengers-trichy-airport

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

ஓமைக்ரான் தொற்று வகை பரவி வரும் காரணத்தால், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு RTPCR மற்றும் விரைவு RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு மிக பெரிய போக்குவரத்து சந்தை “இந்தியா”

இந்த முடிவுகளை பெற பயணிகள் சுமார் 5 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அபாயம் உள்ள நாடுகள் என்ற பட்டியலில் இருந்து சிங்கப்பூர் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன் வழிகாட்டுதலின்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளுக்கு நேற்று முதல் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்