ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பவித்ரா உத்சவம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பவித்ரா உத்சவம் (Pavithra Uthsavam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல்!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், காலை 08.30 மணிக்கு பவித்ர மாலைக்கு சிறப்பு பூஜையும், காலை 09.30 மணிக்கு பவித்ரா மாலை அணிவித்தலும், காலை 10.00 மணிக்கு ஹோமத்தின் தொடக்கமும், காலை 11.00 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெறும்.

ஆகஸ்ட் 27- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை காலை 07.30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், காலை 08.30 மணிக்கு மஹா சாந்தி ஹோமமும், காலை 10.30 மணிக்கு பூர்ணாஹுதியும், தீபாராதனையும், மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், மாலை 06.00 மணிக்கு மஹா சாந்தி ஹோமமும், மாலை 07.30 மணிக்கு பூர்ணாஹுதியும், தீபாராதனையும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது? – விரிவான தகவல்!

ஆகஸ்ட் 31- ஆம் தேதி காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், காலை 07.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், காலை 08.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், காலை 09.00 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 07.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், கடம் புறப்பாடும், இரவு 08.00 மணிக்கு சிறப்புப் பூஜையும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.