சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் கவனத்திற்கு….இந்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

job Singapore cut
Photo: Singapore Minister S.Iswaran Official Facebook Page

பிப்ரவரி 9- ஆம் தேதி அன்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பிரசாந்த் பூஷண் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தாய்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்தும் அல்லது அந்த நாடுகளின் வழியாக இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு பயணத்திற்கு முன்பு எடுக்க வேண்டிய கொரோனா பரிசோதனை முடிவின் ‘நெகட்டிவ்’ சான்றிதழ் மற்றும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவிடுவது தேவையில்லை. அந்த நடவடிக்கை முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 13- ஆம் தேதி அன்று காலை 11.00 மணி முதல் அமலுக்கு வரும்.

சிங்கப்பூரில் சீக்கிரம் கட்டி முடிக்கப்படும் BTO வீடுகளின் தரம் இப்படித்தான் இருக்குமாம்!! நிறுவனம் அளித்த தகவல்…

எனினும், உலக அளவில் கொரோனா பரவலின் நிலைமையை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளில் ரேண்டம் முறையில் 2% கொரோனா ஆர்டி- பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு மாறாக இறந்த நிலையில் கிடந்த சடலம்: யார் அவர்?

இந்திய அரசின் அறிவிப்பால், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஏற்கனவே, சிங்கப்பூர் அரசு, வரும் பிப்ரவரி 13- ஆம் தேதி முதல் அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.