சிங்கப்பூரில் இரவு நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Photo: Singapore Athletics

 

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேபோல், பொது இடங்களான பூங்காக்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றன.

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்கின்றன. மற்றொரு புறம் பொதுமக்கள் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

 

அந்த வகையில் சிங்கப்பூரில் பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருப்பதாலும், மாலை நேரத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், இரவு நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

“இரவு நேரத்தில் போக்குவரத்து மிகக் குறைவாக இருப்பதால் நடைப்பயிற்சி, சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடிகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது” என்று உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் கூறுகின்றன.

 

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பீஷான் பூங்கா, பொங்கோல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 03.00 மணி வரை இளைஞர்கள் முதல் முதியவர்கள் தினந்தோறும் உடற்பயிற்சியில ஈடுபட்டு வருகின்றன.

 

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து உலகில் பெரும்பாலான மக்களும் உடற்பயிற்சியைச் செய்ய தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.