போதைப்பொருட்களை வைத்திருந்த சிங்கப்பூரர் பெர்த் விமான நிலையத்தில் கைது!

Google Image

நவம்பர் 25- ஆம் தேதி அன்று ஆஸ்திரேலிய எல்லைப் படையும் (Australian Border Force), ஆஸ்திரேலிய மத்திய காவல்துறையும் (Australian Federal Police) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi International Airport) இருந்து சிங்கப்பூரர் ஒருவர் விமானம் மூலம் பெர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு (Perth International Airport) சென்றடைந்துள்ளார். அப்போது, அந்த நபரின் லக்கேஜ்-யை சோதிப்பதற்காக, அந்த சிங்கப்பூரரை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வழிமறித்தார்.

‘Carousell’ நிறுவனம் எடுத்த முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி!

பின்னர், சிங்கப்பூரரின் உடமைகளைச் சோதனை செய்தார். அப்போது, அவரது பையில் 100 மி.லி. Gamma Butyrolactone (GBL) மற்றும் அனுமதிக்கப்படாத anabolic steroids போதைப்பொருட்கள் மற்றும் MDMA-யின் ஆறு மாத்திரைகள் வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நவம்பர் 17- ஆம் தேதி அன்று பெர்த் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் முன்பு சிங்கப்பூரர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதைத் தொடர்ந்து, அவருக்கு 2,757 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு அவரால் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாது. எனினும், அந்த சிங்கப்பூரரின் பெயர் குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.