சோதனையில் சிக்கிய ஆடவர்… தப்பிக்க முயன்று 4 அதிகாரிகளை ஆயுதம் கொண்டு தாக்கியதாக குற்றச்சாட்டு – மூவர் மருத்துவமனையில்

cnb-officers-injured-drug-raid-petir
SPF /CNB / Google Maps

போதைப்பொருள்களை உட்கொண்டதாக நம்பப்படும் 26 வயது சிங்கப்பூர் ஆடவரை கைது செய்யும்போது, நான்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை (CNB) சேர்ந்த அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று அக்டோபர் 20 அன்று நடந்த சோதனையின் போது CNB அதிகாரிகளுக்கு அந்த ஆடவர் காயத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

லிட்டில் இந்தியாவில் மது அருந்தத் தடை.. மீறினால் அபராதம், சிறை

இந்த சோதனை நேற்று அதிகாலை 4:50 மணியளவில் பெட்டிர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்தது.

அங்கு சிங்கப்பூர் ஆடவர் கத்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது, கைது செய்ய முற்படும்போது அதிகாரிகளை அவர் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அதிகாரிகள் காயத்துடன் தொடர்ந்து ஆடவரை கட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்தனர்.

CNB அதிகாரிகள் மூவர் வெட்டுக்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். நான்காவது அதிகாரிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் கத்தி, மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் போதைப் பொருள்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்