வெற்றிகரமாக சிங்கப்பூர் வந்தடைந்த Paxlovid மாத்திரையின் முதல் தொகுதி – யார் யாருக்கு?

pfizer-paxlovid-singapore
Pfizer Singapore

Pfizerஇன் Paxlovid என்னும் Covid-19 மாத்திரையின் முதல் தொகுதி சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது.

இது பற்றிய அறிவிப்பை சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் நேற்று பிப்ரவரி 12 அன்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார், அதாவது முதல் தொகுதியின் வருகையை அவர் அறிவித்தார்.

சிங்கப்பூரில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்த 19 வயது மாணவி… என்ன நடந்தது?

“சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் வாய்வழி கிருமித்தொற்று எதிர்ப்பு மருந்து இந்த Paxlovid மாத்திரை ஆகும்.”

மேலும், “கடுமையான கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று ஓங் கூறினார்.

“கூடுதலாக சிகிச்சையளிக்கும் தெரிவுகளுடன், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு சிறந்த மருத்துவத்தை வழங்க தயாரான நிலையில் இருக்கிறோம்.”

கடந்த பிப்ரவரி 3 அன்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) வெளியிடப்பட்ட அறிவிப்பில்; கடுமையான நோய் அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு கோவிட்-19 தொற்றுக்கான மாத்திரையைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் முறையாக நெல் அறுவடை செய்த சிங்கப்பூர்!