மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து… S$1 மில்லியன் அபராதம் விதிக்க கோரிக்கை!

PIE viaduct collapse case
(Photo: TODAY)

கடந்த 2017ஆம் ஆண்டில் இடிந்து விழுந்த மேம்பாலம் தொடர்பான வழக்கில் கட்டுமான நிறுவனத்திற்கு S$1 மில்லியன் அபராதம் விதிக்குமாறு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

கட்டுமான பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 90 பேர் கைது

மேம்பாலம் இடிந்து விழுவதற்கு முன்பே அதன் கட்டமைப்பில் விரிசல்கள் இருந்தது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் அறிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஜூலை 14, 2017 அதிகாலை வரை பணிகள் மேற்கொள்வதை நிறுத்தவில்லை.

நேற்று (ஏப்ரல் 9) இரு தரப்பிலிருந்தும் வாதங்களைக் கேட்ட பின்னர், நீதிபதி தனது தண்டனை அறிவிப்பு தேதியை பின்னர் ஒத்திவைத்தார்.

ஊழியர்களின் பாதுகாப்பு நலனில் அந்நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கடந்த ஜனவரியில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை இணைப்பதற்காக குத்தகை அனுமதியை கிம் பியோ கான்ட்ராக்டர்கள் (ஓ.கே.பி) என்ற நிறுவனத்திற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!