வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சிங்கப்பூர் அரசு!

Photo: Changi Airport

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (02/10/2021) கொரோனாவுக்கான அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.

அதன்படி, சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடந்த மூன்று வாரங்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகள் இனி இரண்டு வாரங்களைப் பொறுத்திருக்கும். 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியவர்களின் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுக் காலம் 10 நாட்களாகக் குறைக்கப்படுகிறது. சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வருவோருக்கான கட்டுப்பாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த புதிய நடைமுறைகள் அக்டோபர் 6- ஆம் தேதி அன்று இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூரர்கள்!

அதேபோல், வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவர். இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வருகிறது. அக்டோபர் 15- ஆம் தேதியிலிருந்து அவர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். உலக நாடுகளின் கொரோனா நிலவரத்தைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும். அனுமதிக்கான காத்திருப்புக் காலம் மூன்று முதல் ஆறு மாதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

மாணவர் அனுமதி வைத்திருப்பவர்களும், குடும்ப உறுப்பினர்கள் வழி மூலம் சிங்கப்பூருக்கு வரப் பதிவுச் செய்தவர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிப் போட்டிருக்க வேண்டிய விதி பொருந்தாது.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்ற வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் விமான நிறுவனங்கள், படகு ஆப்ரேட்டர்கள் அல்லது சிங்கப்பூருக்கு வந்தவுடன் சோதனை சாவடியில் தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் கோரப்பட்டால், பயணிகள் தாங்கள் முழுமையான கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் வசிப்பவர்களுக்கு மேலும் தளர்வுகள்!

அரசு அறிவிப்பால், இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து, வீட்டு பணிப்பெண்கள், எஸ் பாஸ் மற்றும் கட்டுமான, மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் வேலை அனுமதி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், சிங்கப்பூரில் அனைத்து துறைகளும் மீண்டும் எழுச்சிப் பெற்று பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.