பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்... நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100
Singapore Plumbing Society/Facebook, right photo via BCA/Facebook

சிங்கப்பூரில் தொழில்சார் குழுவின்கீழ் முழுநேர வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் நடுத்தர சம்பளம் S$2,700 என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களின் சராசரி சம்பளம் S$3,100 என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..

அதாவது கைவினைஞர்கள் மற்றும் தொடர்புடைய வர்த்தக ஊழியர்களின் சம்பளம் தொடர்பான கேள்விகளுக்கான பதில் இதுவாகும்.

தொழில்சார் குழுவின்கீழ் வரும் வேலைகள்:

மொத்தம் 53,000 சிங்கப்பூரர்கள் மற்றும் 133,000 வெளிநாட்டவர்கள் இந்த குறிப்பிட்ட தொழில் குழுவின் கீழ் பணிபுரிகின்றனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் திறமையான கைவினை ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து தொழிலாளர் கட்சி (WP) நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விகளுக்கு டான் பதிலளித்தார்.

அதாவது, சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் நடுத்தர (Median) மற்றும் சராசரி (Average) சம்பளம் குறித்து கேள்வி இருந்தது.

அதே போல, எதிர்காலத்தில் அத்தகைய ஊழியர்களுக்கான தேவை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறிய பதிலில், திறமையான ஊழியர்களின் தேவை என்பது வர்த்தகம் சார்ந்து வேறுபடுகின்றன என்றார்.

பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் போன்ற வேலைகள் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன, இதற்கு எப்போதும் தேவை இருப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்