ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் – சிங்கப்பூர் பிரதமர் லீ

PM Lee condolence india deadly train crash

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் லீ தனது இரங்கல் செய்திகள் அடங்கிய கடிதத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ளார்.

நடைபாதையில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனுக்கு 24 தையல்

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) வெளியிட்ட கடிதத்தில் திரு லீ கூறியதாவது; “இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கோர விபத்தில் 288க்கும் அதிகமானோர் இறந்ததாகவும், குறைந்தது 700 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், மேலும் அவர்களில் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2 அன்று ஒடிசாவின் பாலசோரில் நடந்த இந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து மிகவும் வருந்தியதாக பிரதமர் லீ கூறினார்.

இந்த விபத்தில் சிங்கப்பூரர்கள் யாரும் சிக்கியதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று MFA கூறியது.

உள்ளூர் அதிகாரிகளுடன், மும்பையில் உள்ள சிங்கப்பூரின் துணைத் தூதரகம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் மும்பையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சிங்கப்பூர் தூதரக தொடர்பு எண்: +91-82910-32836

MFA டூட்டி அலுவலக தொடர்பு எண்: +65-6379-8800 

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பரமக்குடி ஊழியர் திருமணத்துக்கு வந்த சிங்கப்பூர் முதலாளி: “தமிழ் கலாச்சாரம், உபசரிப்பு வியப்பாக உள்ளது” என பெருமிதம்