மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் லீ வாழ்த்து!

PM Lee congratulates Aung San Suu Kyi
PM Lee congratulates Aung San Suu Kyi (PHOTO: Yahoo)

மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவரது ஜனநாயக தேசிய லீக் (NLD) கட்சிக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் நேற்று (நவம்பர் 12) வாழ்த்து கூறியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள், மியான்மர் மக்கள் கட்சியின் தலைமை மற்றும் அவரின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன என்று திரு லீ, திருமதி ஆங் சான் சூகிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமான டிக்கெட்டுகளுக்கான தேவையில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்காது – நிபுணர்கள்

மியான்மரும் சிங்கப்பூரும் பழைய நண்பர்கள் மற்றும் நீண்டகால பங்காளிகள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதி மற்றும் சட்ட ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இருநாடுகளுக்கும் விரிவான ஒத்துழைப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்றுநோய் சூழலின் போது, இரு நாடுகளும் ஒன்றிணைந்து பரிவர்த்தனை, தகவல்களைப் பரிமாற்றம், இரு நாடுகளில் வாழும் தங்கள் நாட்டினருக்கு உதவியது ஆகியவற்றை திரு லீ குறிப்பிட்டார்.

பழைய உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராயவும் மியான்மருடன் பணியாற்ற எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் நகைக் கடை கொள்ளையில் சதித்திட்டம் தீட்டியவருக்கு சிறை மற்றும் பிரம்படி.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…