சிங்கப்பூரில் நகைக் கடை கொள்ளையில் சதித்திட்டம் தீட்டியவருக்கு சிறை மற்றும் பிரம்படி

(Photo: iStock)

ஆங் மோ கியோவில் உள்ள நகைக் கடையில் S$119,000 பகல் திருட்டை திட்டமிட்டவருக்கு இன்று (நவம்பர் 12) மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

எம். ஜெகதீஷ் (வயது 28) என்ற ஆடவர், மற்ற இரண்டு ஆடவர்களுடன் இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தீபாவளி சிறப்பு அலங்காரம்.

திட்டம்

பிளாக் 574, ஆங் மோ கியோ அவென்யூ 10இல் உள்ள கடையில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டதாகவும், அதன் உரிமையாளர்கள் வயதானவர்களாகவும் இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

துணை குற்றவாளிகள்

குற்றம் நடந்த நேரத்தில் ஜெகதீஷ் கோஜெக் (Gojek) ஓட்டுநர் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவரது துணை குற்றவாளிகள் வீரமணி சுப்ரான் தாஸ் மற்றும் ஷரவீந்திரன் சுப்பையா.

ஆகஸ்ட் 13, 2019 அன்று, மூன்று பேரும் கெய்லாங்கில் சந்தித்தனர், அங்கு ஜெகதீஷ் அடுத்த நாள் கடையை கொள்ளையடிக்கும் தனது திட்டத்தை அவர்களிடம் கூறினார்.

அவர்கள் திட்டம்படி, திருடப்பட்ட அந்த நகைகள் வீரமணியிடம் வந்தது. வீரமணி அதில் ஷரவிந்திரனுக்கும் வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைகளை பதுக்கினர்

ஷரவிந்திரனால் நகைகளை விற்கமுடியவில்லை. அதனால் டக்கோட்டா கிரசெண்டிலுள்ள (Dakota Crescent) ஆளில்லா HDB பிளாக்குகளில் அந்த நகைகளை பதுக்கி வைத்தார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் வீரமணியின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தினர். ​​

கைது

அப்போது அவர் தனக்காக எடுத்துக்கொண்ட நகைகளை தனது ஜன்னலுக்கு வெளியே எறிந்தார். பின்னர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்து நகைகள் அனைத்தையும் மீட்டது.

ஜெகதீஷ்  கொள்ளைச் செய்ய சதி செய்ததாக ஒரு குற்றச்சாட்டுக்கு இன்று வியாழக்கிழமை ஒப்புக் கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சிறைத்தண்டனை

முன்னர், வீரமணிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மேலும், மூன்றாவது குற்றவாளியான ஷரவீந்திரனுக்கு பின்னர் தண்டனை வழங்கப்படும்.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்துவந்த வெளிநாட்டவர்கள் 7 பேர் கைது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…