சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்துவந்த வெளிநாட்டவர்கள் 7 பேர் கைது!

7 Myanmar nationals arrested in Singapore
(Photo: Immigration and Checkpoints Authority)

சிங்கப்பூரில் குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்காக, மியான்மர் நாட்டை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (நவ. 12) தெரிவித்துள்ளது.

ICA அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைமையிலான இந்த கூட்டு சோதனை நடவடிக்கையில், 30 முதல் 42 வயதுக்கு உட்பட்ட ஆடவர்கள் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் 500 ஊழியர்களைக் குறைக்க உள்ள ஷெல் நிறுவனம்.

கைது

சுங்கே தெங்கா ரோட்டில் அமைந்துள்ள ஒரு காய்கறி பண்ணையில் அதிகாலை 5 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அச்சமயம் தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள 6 தங்குமிடங்களில் தூங்கிக் கொண்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை அனுமதி இல்லை

செல்லுபடியாகும் குடிவரவு அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும், சரியான வேலை அனுமதி இல்லாமல் பண்ணையில் வேலை செய்து வந்ததாகவும் ICA குறிப்பிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன.

சட்டம்

சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்குபவர்களுக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 3 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

அனுமதி இல்லாமல் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்திய குற்றவாளி, ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அதே போல S$6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை; நவம்பர் 17 முதல் அமல்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானங்களின் அப்டேட்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…