சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை; நவம்பர் 17 முதல் அமல்..!

Singapore require COVID-19 PCR Test
Photo: Koh Mui Fong/TODAY

கொரோனா வைரஸ் கிருமித்தொற்று அபாயம் அதிக உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருவோர் அடுத்த வாரம் முதல் புதிய நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவர்கள் என்றும், அவர்கள் தங்களின் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்குள்ளாக எடுக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் வந்தடைந்ததும் 14 நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த உத்தரவு காலம் முடிவடைந்ததும் அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும், இந்த புதிய கட்டுப்பாடு நவம்பர் 17 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

இந்த புதிய நிபந்தனைகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு பொருந்தாது என்றும், அத்துடன் கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடுகளான புரூணை, நியூசிலாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வருவோருக்கும் புதிய கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிருமிதொற்று குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வருவோர், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் PCR பரிசோதனைய செய்துகொள்ள வேண்டும் அல்லது ஏழு நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவை அவர்கள் நிறைவேற்றி அதன் இறுதியில் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், 14 நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவுக் காலத்தை ஒதுக்கப்பட்ட வளாகங்களில் தங்கி நிறைவேற்ற வேண்டும் என்றும், அது வீடாகவும் இருக்கலாம். ஆனால் அங்கு வேறுயாரும் வசிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வருவோர், வீட்டில் இருக்கும் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைக் கண்காணிக்க மின்னியல் கருவிகளை அணிந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்‌.

வீட்டில் இருப்பதற்கான உத்தரவு காலத்தின்போதும் சமூகத்திலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும் வெளிநாடுகளிலிருந்து வருவோரிடையே COVID-19 கிருமித்தொற்று பதிவானதாகவும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய பயணிகள், சிங்கப்பூர் வருவதற்கு முன்பாகவே COVID-19 பரிசோதனையைச் செய்து கொள்வது கூடுதலான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் அரிவாள் கொண்டு அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…