சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

(Photo: TODAY)

சமூகத்தில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் பார்வையிட்ட பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) சேர்த்துள்ளது.

இதில் Bugis Street மற்றும் இரண்டு Kopitiam food courts ஆகிய இடங்களை அந்த பட்டியலில் அமைச்சகம் சேர்த்துள்ளது.

சிங்கப்பூரில் அரிவாள் கொண்டு அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது.

Bugis Street வெவ்வேறு தேதிகளில் மூன்று முறை இதில் பட்டியலிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 10 ஜுராங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 12 இல் உள்ள Kopitiam கடைக்கு இரண்டு முறை தொற்று பாதித்த நபர் அல்லது நபர்கள் சென்றுள்ளனர்.

மேலும், V Hotel Lavenderல் உள்ள மற்றொரு Kopitiam உணவு நிலையமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது.

(Table: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…