சிங்கப்பூரில் அரிவாள் கொண்டு அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது..!

Certis officers attack arrested
Man arrested after attack on Certis officers in Sembawang

செம்பாவாங்கில் இரண்டு செர்டிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதன் சந்தேகத்தின்பேரில் 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்களன்று (நவம்பர் 9) இரவு 7.30 மணியளவில், தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) அதிகாரிகளோடு இணைந்து இரண்டு செர்டிஸ் அதிகாரிகள் சட்ட அமலாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு.

காவல்துறை

பின்னர், அந்த அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கான்பெர்ரா லிங்க் அருகே அதிகாரிகள் அமலாக்கப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளனர்.

ஒரு அதிகாரி முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது, மற்றொரு அதிகாரியின் மீது அரிவாளால் அவரது கை மற்றும் கால்களில் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

தப்பி ஓட்டம்

மேலும் அந்த ஆடவர், அதிகாரிகள் வருவதற்கு முன்பு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இரண்டு அமலாக்க அதிகாரிகளும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது

உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவினர், கண்காணிப்புக் கேமரா மற்றும் விசாரணை மூலம் சந்தேக நபரின் அடையாளத்தை 7 மணி நேரத்திற்குள் கண்டறிந்து கைது செய்தனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே ரத்தக் கறை படிந்த அரிவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்

இதில் ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை, அபராதம், பிரம்படி ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ மூன்றோ கலந்து விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பழம் வாங்க காரில் வெளியே சென்றவருக்கு அபராதம் – வாகனம் ஓட்டத் தடை.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…