சிங்கப்பூரில் பழம் வாங்க காரில் வெளியே சென்றவருக்கு அபராதம் – வாகனம் ஓட்டத் தடை.!

Man gets driving ban
Pic: Getty Images

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் 9ஆம் தேதி இரவு கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த நிலையில், தன் நண்பருடன் ஒருவர் டுரியான் பழங்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

டுரியான் பழங்களை வாங்க காரில் அவர் வேகமாகச் சென்றதை அவருடைய நண்பர்
புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

“ஆசியாவின் சிறந்த துறைமுகம் சிங்கப்பூர்” – 32வது முறையாக பட்டத்தை வென்று சாதனை..!

இதனையடுத்து, Nazar-Rushdy Nazar Rosly என்ற 21 வயதுக்கு ஆடவருக்கு நேற்று S$3,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு வருட காலத்திற்கு வாகனத்தை ஓட்டத்  தடையும் விதிக்கப்பட்டது.

பின்னர், அந்த நபர் COVID-19 கட்டுப்பாடுகளை மீறியது, ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது, டுரியான் பழங்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே சென்றது போன்றவை தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட நாட்டிற்கு இடையிலான பயணத்திற்கு சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படும் – SIA..!

இதுமட்டுமல்லாமல், வேறு ஒருவரை பார்ப்பதற்காக COVID-19 நிபந்தனைகளை மீறி வீட்டைவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படும் மூன்றாவது குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்கூறிய குற்றச் செயல்களை கடந்த மே மாதம் 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nazar-Rushdy தனது காரை மத்திய விரைவுச் சாலையில் இருந்து Seletar விரைவுச் சாலையை நோக்கி சுமார் 160 கி.மீட்டர் வேகத்தில் சென்றதை காரில் இருந்த அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி…ஒன்றின் விலை S$25..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…