சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி…ஒன்றின் விலை S$25..!

mom-higher-rate-workplace-deaths-first-half-2022
(PHOTO: Roslan Rahman/ Getty Image)

முதலாளிகள் தங்கள் ஊழியர்களை சளிக்காய்ச்சலிருந்து பாதுகாக்க ஒரு முறை தடுப்பூசி திட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) திங்கள்கிழமை (நவம்பர் 9) தெரிவித்துள்ளது.

இதனை மனிதவள அமைச்சகத்தின் (MOM) கீழ் உள்ள ACE குழு ஏற்பாடு செய்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் வெற்றி: “உலகெங்கிலும் பெண் சிறுபான்மையினருக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம்”.

வெளிநாட்டு ஊழியர்கள்

கட்டுமான, கடல் அல்லது செயல்முறை துறைகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்த தடுப்பூசி கிடைக்கும்.

அவர்கள் தங்கும் விடுதிகளில் அல்லது சமூகத்தில் வாழ்ந்தாலும் சரி, அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை

அந்த தடுப்பூசி ஒன்றின் விலை S$25 ஆகும். அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய ஊக்குவிப்பதாக மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டது

COVID-19 உட்பட தொற்றுநோய்களுக்கு எதிரான இந்த போராட்டம் அனைவருக்கும் பகிந்துகொள்ளவேண்டிய பொறுப்பாகும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதன் நோக்கம் தொற்றுநோய்களுக்கு அதிக ஆபத்தில் இருக்கும் ஊழியர்களை பாதுகாப்பதாகும் என்று MOM கூறியுள்ளது.

பதிவு

இன்று நவம்பர் 9 முதல் நவம்பர் 30 வரை, www.mom.gov.sg/register-flu-vaccine என்ற முகவரியில் MOM- நியமிக்கப்பட்ட இடங்களில் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு பதிவு செய்யலாம்.

எப்போது கிடைக்கும்?

வெளிநாட்டு ஊழியர்கள் இந்த தடுப்பூசிகளை டிசம்பர் 1 தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை போட்டுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் 6,370 வேலை வாய்ப்புகள்.

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…