கமலா ஹாரிஸ் வெற்றி: “உலகெங்கிலும் பெண் சிறுபான்மையினருக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம்”..!

Kamala Harris' US election victory a 'historic moment for women minorities': Halimah Yacob
(PHOTO: REUTERS)

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸின் வெற்றி “அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என்று சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப் தெரிவித்துள்ளார்.

திரு. ஜோ பைடன் அனைத்து முக்கிய தொலைக்காட்சிகளாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (சிங்கப்பூர் நேரம்) அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் 6,370 வேலை வாய்ப்புகள்.

அமெரிக்காவின் அதிபர் திரு. ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் அதிபர் ஹலிமா முகநூலில் வாழ்த்து கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண், துணையதிபராக ஹாரிஸின் இந்த தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அதிபர் ஹலிமா பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

பொது வாழ்வில், தனது நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், தடைகளை உடைப்பதில் அவர் அச்சம் காட்டவில்லை என்று அவர் பெருமிதம் கொண்டார்.

இந்த வாழ்க்கை வழியில் பல சாதனைகளை முதன்முறையாக நிகழ்த்தியிருக்கிறார். இந்த சமீபத்திய வெற்றி அவருக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த வரும் ஆண்டுகளில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரிஸுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி காத்திருப்பதாக அதிபர் ஹலிமா மேலும் கூறினார்.

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…