குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.!

Singapore stay-home notice travel
(Photo by Silas Stein / dpa / AFP)

கடந்த 14 நாட்களில், எஸ்டோனியா அல்லது நார்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள், தனிமைப்படுத்தும் வசதிகளில் 14 நாட்களை கட்டாயம் தங்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

இந்த அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ1.30 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

கடந்த வாரத்தில் அந்த இரு நாடுகளிலும் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலிருந்தும் வருபவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, தங்களின் தனிமை உத்தரவை அவர்களுக்கு பொருத்தமான குடியிருப்பு இடத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று MOH கடந்த அக்டோபர் 27 அன்று அறிவித்தது.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) கடந்த வியாழக்கிழமை நார்வேயர்களிடம் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, ஃபிஜி (Fiji), ஃபின்லாந்து, ஜப்பான், கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் தங்களுக்கேற்ற தங்கும் வசதிகளில் உத்தரவை நிறைவேற்ற தொடர்ந்து விண்ணப்பம் செய்யலாம்.

ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் அல்லது பிராந்தியத்திற்கும் அவர்கள் கடந்த 14 நாள்களில் பயணம் செய்திருக்கக்கூடாது.

அனைத்து பயணிகளும் தங்கள் சென்றுவந்த பயணம் குறித்த அறிக்கையை துல்லியமாக சமர்ப்பிக்க வேண்டும். இதில் தவறான அறிவிப்புகளுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரர்கள் அரசியலில் விரும்புவதை PAP ஏற்று செயல்படுத்த வேண்டும் – பிரதமர் லீ.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…