திருச்சி விமான நிலையத்தில் ரூ1.30 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

Trichy Airport

தமிழகத்திற்கு வரும் விமானங்களில், குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் பொருள்கள் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.

அதிலும் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள், இதில் அதிகம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரர்கள் அரசியலில் விரும்புவதை PAP ஏற்று செயல்படுத்த வேண்டும் – பிரதமர் லீ.

அந்த நாடுகளில் இருந்து வரும் சில பயணிகள் வரி செலுத்தாமலும், அரசாங்கத்திற்குத் தெரியாமலும் கடத்திவருவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய ஊழியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ என்னும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஒரு பயணியிடம் சோதனை செய்ததில், உடைமையில் மறைத்து வைத்து கொண்டுவந்த 2,600 கிராம் தங்கம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய மதிப்பில் ரூபாய் 1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரில் கிரேன் விபத்தில் பலியான தமிழக ஊழியர்; மனிதவள அமைச்சகம் விளக்கம்.

குணமடைந்த ஊழியர்களுக்கு வழக்கமான சோதனையிலிருந்து விலக்கு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…