சிங்கப்பூரில் கிரேன் விபத்தில் பலியான தமிழக ஊழியர்; மனிதவள அமைச்சகம் விளக்கம்.!

Singapore Novena Crane Accident
Pic: MOM

சிங்கப்பூர் நோவெனாவில் (Novena) உள்ள ஒரு பணிநிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி கட்டுமான கிரேன் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக ஊழியர் பலி

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி டான் டோக் செங் மருத்துவமனைக்கு (TTSH) கொண்டு செல்லப்பட்டார். அன்று காலை 8.50 மணியளவில் ஜலான் டான் டோக் செங்கில் (Jalan Tan Tock Seng) உள்ள ஒரு கட்டுமான இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், 28 வயதான வேல்முருகன் சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும், அதன் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும், 35 வயதான தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவு அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குணமடைந்த ஊழியர்களுக்கு வழக்கமான சோதனையிலிருந்து விலக்கு..!

மனிதவள அமைச்சகம் பரிந்துரை

இந்த சம்பவத்திற்கு பிறகு, கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படும் கிரேன் பாகங்கள் செயல்படும் விதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிரேனில் உள்ள மேல் எழும்பச் செய்யும் கம்பி வடங்கள் அதிலிருந்து அகற்றப்பட வேண்டும் அல்லது துண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின், அது வலுவாக பிணைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்தக் கம்பி வடங்களைப் கிரேனிலேயே இருக்குமாறு சில கிரேன் தயாரிப்பாளர்கள் விட்டு விடுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியது.

கடந்த ஆண்டு நடந்த இந்த விபத்தை படிப்பினையாக கொண்டு, கிரேனை இன்னும் பாதுகாப்பாக பயன்படுத்த கட்டுமானத் தொழில்துறையை ஊக்குவிக்க மனிதவள அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பரிந்துரைத்துள்ளது.

சிங்கப்பூரின் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர் சலீம் மொயின் காலமானார்..!

சிக்கிக்கொண்ட கிரேன்

நோவெனாவில் உள்ள ஒரு பணிநிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி கட்டுமானத்தளத்தில், ஒரு கிரேன் 300 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டிருந்தபோது, அதன் செயலாக்கம் தீடீரென நின்றது.

அந்தத்தளத்தில், டான் டோக் செங் மருத்துவமனையின் ஒரு பகுதியான நோயாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.

கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கம்பி வடம் சிக்கிக்கொண்டதால், கிரேனின் குறுக்கு உத்திரத்தால் கீழ் நோக்கி நகர முடியவில்லை.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம்

பின்னர் திடீரென, அந்தக் கம்பி வடத்தின் சிக்கல் முடிச்சு தானாகவே அவிழ்ந்தது, கிரேன் பிடித்திருந்த குறுக்கு உத்திரம் கீழே சரியத் தொடங்கியது. இருப்பினும், இதனால் விபத்து நிகழவில்லை, நிர்ணயிக்கப்பட்ட எடையின் அளவைவிட கூடுதலான எடையை அந்த கிரேன் தூக்கவில்லை.

அந்தக் குறுக்கு உத்திரம் தூக்கியிருந்த எடையும், அதனைப் பிடித்திருந்த கொக்கியும் விழுந்து கீழே வேலை செய்து கொண்டிருந்த இரு ஊழியர்களைத் தாக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலேஸ்டியர் பகுதியில் காவல்துறையினரால் சுடப்பட்ட ஆடவர்- மேலும் 2 பேர் மீது குற்றச்சாட்டு..!

உலகிலேயே முதல் சம்பவம்

எடையை மேலே கொண்டு வரும் கம்பி வடம் காரணமாக நிகழ்ந்த கிரேன் விபத்து என்று பார்த்தால் உலகிலேயே இது தான் முதல் சம்பவம் என்று மனிதவள அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் உள்ள படிப்பினைகளை நன்றாக ஆராய்ந்து இதுபோல் சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…