சிங்கப்பூரின் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர் சலீம் மொயின் காலமானார்..!

Singapore international footballer dies
Singapore international footballer dies (Photo: Facebook/Football Association of Singapore)

சிங்கப்பூரின் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர் சலீம் மொயின் காலமானார், அவருக்கு வயது 59 என்று சிங்கப்பூர் கால்பந்து சங்கம் (FAS) இன்று (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவில், திரு சலீமின் மரணம் அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக FAS குறிப்பிட்டுள்ளது.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டம் மீண்டும் தொடங்க விருப்பம்.

மேலும், 1980கள் மற்றும் 1990களில் மலேசியா கோப்பை, உலகக் கோப்பை தகுதி, மற்றும் பிற போட்டிகளில் லயன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திரு சலீம், சிங்கப்பூர் கால்பந்தில் மிகவும் மதிக்கப்படுபவர். அவர் ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறினார், முன்னாள் தேசிய கால்பந்து அகாடமியில் சிறிது காலம் இருந்தார் என்றும் FAS கூறியுள்ளது.

ஹௌகாங் யுனைடெட் கிளப், இன்று அதிகாலை பேஸ்புக் பதிவில் இரங்கலைத் தெரிவித்துள்ளது, திரு சலீமின் மரணம் மிகவும் வருத்தமடைய செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த கடினமான நேரத்தில் திரு. சலீமின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக FSA குறிப்பிட்டுள்ளது.

SingPass செயலியில் தற்போது புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…