SingPass செயலியில் தற்போது புதிய அம்சம் அறிமுகம்..!

singpass digital sign
Photo Credit : GovTech

SingPaas செயலியில் தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்ட மற்றும் வர்த்தக ஆவணங்களில் மின்னிலக்கக் கையொப்பம் இடும் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை.

இந்த புதிய அம்சம் “Sign with SingPass” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய அம்சம் மூலம் ஆவணங்களில் 2 நிமிடங்களில் கையெழுத்திட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2.1 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

இது குறித்து அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு கூறுகையில், சட்ட மற்றும் வர்த்தக ஆவணங்களில் மின்னிலக்கக் கையொப்பமிடுவதை எளிதாக்குவதே இதன் நோக்கம் என்று தெரிவித்தது.

Photo Credit : GovTech

ஆன்லைன் பரிவர்த்தனைகளின் தேவை தற்போது அதிகரித்துவருவதால், இந்த புதிய அம்சத்தின் மூலம் அமைப்புகளும் அவற்றின் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள்.

மேலும், இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக நேரடியாக ஆவணங்களில் கையெழுத்திடுவதன் சிரமத்தையும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இந்தமுறை புத்தாண்டு வாணவேடிக்கை இல்லை.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…