கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டம் மீண்டும் தொடங்க விருப்பம்..!

Malaysia KL-Singapore HSR
Malaysia KL-Singapore HSR (Photo: MyHSR)

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டத்தை மலேசிய அரசாங்கம் தொடர விரும்புகிறது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் (Tengku Zafrul Aziz) கூறியுள்ளார்.

மேலும், அதன்மூலம் மலேசியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SingPass செயலியில் தற்போது புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

இருப்பினும், இந்த திட்டம் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை பொறுத்தது அமையும் என்றும் அவர் கூறினார்.

COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு அவரது கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.

பட்ஜெட் உரை

அதில் திரு. தெங்கு ஜஃப்ருல் தனது பட்ஜெட் உரையில், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டினார்.

திட்டங்கள்

அடுத்த 2021ஆம் ஆண்டில், பான் போர்னியோ (Pan Borneo) நெடுஞ்சாலை, கேமாஸ்-ஜொகூர் பஹ்ரு (Gemas-Johor Bahru) ரயில்வே திட்டம் மற்றும் Klang Valley Double Tracking போன்ற திட்டங்கள் பற்றியும் பேசினார்.

நிதி

மேலும், அந்த திட்டங்களுக்கு நிதியளிக்க RM15 பில்லியன் (3.63 பில்லியன் டாலர்) பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

RTS இணைப்பு திட்டம்

அது தவிர, ஜொகூர் பஹ்ரு முதல் உட்லேண்ட்ஸ் வரையிலான RTS இணைப்பு திட்டம் மற்றும் Klang Valley பகுதியில் உள்ள MRT பாதை ஆகிய மற்ற திட்டங்களும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் கட்டணம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…