பாலேஸ்டியர் பகுதியில் காவல்துறையினரால் சுடப்பட்ட ஆடவர்- மேலும் 2 பேர் மீது குற்றச்சாட்டு..!

Man who was shot by police in Balestier raid
Man who was shot by police in Balestier raid

பாலேஸ்டியர் (Balestier) பகுதியில் நடந்த காவல்துறை சோதனையின்போது, அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற ஆடவர் ஒருவர் காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டார்.

இதில் 36 வயதான பிரகாஷ் மதிவாணன் என்ற அந்த ஆடவர், காவல்துறை அதிகாரியை தானாக முன்வந்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டம் மீண்டும் தொடங்க விருப்பம்.

குற்றம்

பிரகாஷ் மதிவாணன் மற்றும் மேலும் இரண்டு பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

காவல்துறை அதிகாரியை கையால் குத்தியும், உதைத்தும், மேலும் சிங்டலை (Singtel) ஏமாற்றி S$14,273 மதிப்புள்ள ஏழு iPhone-களை வேறொரு நபருக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மற்ற இருவர்

மேலும், இந்த சம்பவத்தில் 22 வயதான Nikhil M Durgude என்ற ஆடவர், காவல்துறை அதிகாரியை வேண்டுமென்றே தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மற்றொருவர், மலானி நாயுடு பிரபாகர் நாயுடு, இவரும் Singtel நிறுவனத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SingPass செயலியில் தற்போது புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உடல்நிலை

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உடல்நிலை சீராக இருந்தாகவும், இதில் சுடப்பட்ட பிரகாஷ் நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் சீராக இருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம்

காவல்துறை அதிகாரியை தனது கடமையை செய்யவிடாமல் தடுத்து நிறுத்துதல், தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பிரகாஷ் மற்றும் நிகில் ஆகியோரை ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம், அபராதம் விதிக்கலாம், பிரம்படி விதிக்கலாம் அல்லது இதில் ஏதேனும் விதிக்கலாம்.

மோசடி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரகாஷ் மற்றும் மலானி ஆகியோரை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து அபராதம் விதிக்கலாம்.

தமிழகம் – சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் கட்டணம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…