குணமடைந்த ஊழியர்களுக்கு வழக்கமான சோதனையிலிருந்து விலக்கு..!

(Photo: Lawrence Wong/ FB)

COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த அனைத்து ஊழியர்களுக்கும் தற்போது வழக்கமான சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (நவம்பர் 6) கூட்டு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரின் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர் சலீம் மொயின் காலமானார்.

இந்த ஊழியர்களுக்கு மீண்டும் தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக சமீபத்திய அறிவியல் சான்றுகளை மறுஆய்வு செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் இன்றுவரை அதுபோன்ற ஊழியர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சுக்கள் மேலும் தெரிவித்தன.

இந்த விலக்கு அனைத்து தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கும், கட்டுமான, கடல் மற்றும் உற்பத்தி (CMP) துறைகளில் உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தும்.

புதன்கிழமை முதல், COVID-19-லிருந்து குணமடைந்த ஊழியர்கள் இனி வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, COVID-19 நோயால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கான வழக்கமான சோதனை முறையில் எந்த மாற்றமும் இல்லை.

MOH மற்றும் MOM சமீபத்திய அறிவியல் ஆதாரங்களை தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து அதற்கேற்ப சோதனை முறைகளில் மாற்றம் கொண்டு வருவார்கள் என்றும் அமைச்சுகள் தெரிவித்தன.

பாலேஸ்டியர் பகுதியில் காவல்துறையினரால் சுடப்பட்ட ஆடவர்- மேலும் 2 பேர் மீது குற்றச்சாட்டு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…